Close
டிசம்பர் 18, 2024 4:53 மணி

ரூ.199, ரூ.499, ரூ.999… பொங்கலுக்கு என்ன வேணும்?

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களில் 3 அலகுகளில் ‘கூட்டுறவு பொங்கல்’ தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு “கூட்டுறவு பொங்கல்” என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்க தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது.

கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களான நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

என்னென்ன பொருட்கள் வழங்க வேண்டும் என்ற விவரங்களையும் தமிழக அரசு தெளிவாக வரையரை செய்துள்ளது.

இனிப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.199/-க்கும்,

சிறப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.499/-க்கும் மற்றும் பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.999/-க்கும் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இனிப்பு பொங்கல் தொகுப்பு ரூ.199 :

* பச்சரிசி (BPT 43) – 500 கிராம்

* பாகு வெல்லம் – 500 கிராம்

* ஏலக்காய் – 5 கிராம்

* முந்திரி – 50 கிராம்

* ஆவின் நெய் – 50 கிராம்

* பாசி பருப்பு – 100 கிராம்

* உலர் திராட்சை – 50 கிராம்

* சிறிய பை – 1

சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499 :

* மஞ்சள் தூள் – 50 கிராம்

* சர்க்கரை – 500 கிராம்

* துவரம் பருப்பு – 250 கிராம்

* கடலைப் பருப்பு – 100 கிராம்

* பாசிப் பருப்பு – 100 கிராம்

* உளுத்தம் பருப்பு – 250 கிராம்

* கூட்டுற உப்பு – 1 கிலோ

* நீட்டு மிளகாய் – 250 கிராம்

* தனியா – 250 கிராம்

* புளி – 250 கிராம்

* பொட்டுக் கடலை – 200 கிராம்

* மிளகாய் தூள் – 50 கிராம்

* செக்கு கடலை எண்ணெய் – 1/2 லிட்டர்

* கடுகு – 100 கிராம்

* சீரகம் – 50 கிராம்

* மிளகு – 25 கிராம்

* வெந்தயம் – 100 கிராம்

* சோம்பு – 50 கிராம்

* பெருங்காயம் – 14 கிராம்

* மளிகை பை – 1

பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999

* மஞ்சள் தூள் – 50 கிராம்

* சர்க்கரை – 1/2 கிலோ

* கூட்டுறவு உப்பு – 1 கிலோ

* துவரம் பருப்பு – 1/4 கிலோ

* உளுந்தம் பருப்பு – 250 கிராம்

* கடலை பருப்பு – 200 கிராம்

* பச்சை பட்டாணி – 100 கிராம்

* பாசி பருப்பு (சிறுபருப்பு) – 250 கிராம்

* வெள்ளை சுண்டல் – 200 கிராம்

* வேர்க்கடலை – 200 கிராம்

* பொட்டுக்கடலை – 200 கிராம்

* வரமிளகாய் – 250கிராம்

* புளி – 200 கிராம்

* தனியா – 25 கிராம்

* கடுகு – 100 கிராம்

* மிளகு – 50 கிராம்

* சீரகம் – 50 கிராம்

* வெந்தயம் – 100 கிராம்

* சோம்பு – 50 கிராம்

* ஏலக்காய் – 5 கிராம்

* செக்கு கடலை எண்ணெய் – 1/2 லிட்டர்

* வரகு – 500 கிராம்

* சாமை – 500 கிராம்

* திணை – 500 கிராம்

* ரவை – 500 கிராம்

* அவல் – 250 கிராம்

* ராகி மாவு – 500 கிராம்

* கோதுமை மாவு – 500 கிராம்

* ஜவ்வரிசி – 200 கிராம்

* வறுத்த சேமியா – 170 கிராம்

* மல்லி தூள் – 50 கிராம்

* சாம்பார் தூள் – 50 கிராம்

* மிளகாய் தூள் – 50 கிராம்

* பெருங்காயத் தூள் – 25 கிராம்

* பெரிய மளிகை பை – 1

மேற்குறிப்பிட்ட பெரும் பொங்கல் பெயரில் தொகுப்புடன் விலையில்லாமல் நாட்டு சர்க்கரை 500 கிராம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top