வேலூர் மத்திய சிறையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய சிறை உள்ளே ஒன்றாவது பிளாக் அருகாமையில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் சிறிய வகை ட்ரோன் கேமராவை சிறை காவலர்கள் கைப்பற்றி பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் பாகாயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் இந்த ட்ரோன் கேமரா சிக்னல் துண்டிக்கப்பட்டதால் கேமரா சிறை வளாகத்தில் விழுந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் வேலூர் சைபர் கிரைம் காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, இந்த ட்ரோன் கேமராவுக்கு எந்த பகுதியில் இருந்து சிக்னல் கிடைக்கப்பெற்றது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.