Close
ஏப்ரல் 3, 2025 12:33 மணி

தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு..!

தமிழ்நாடு மின்சார வாரியம் -கோப்பு படம்

நாட்டிலேயே மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்று தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் குறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், 2023 மார்ச் மாத கட்டண விகிதங்களின்படி 100 யூனிட் மின்சாரத்திற்கு அனைத்து வரிகள் உட்பட மும்பையில் ரூ.643, இராஜஸ்தானில் ரூ.833, மத்தியபிரதேசத்தில் ரூ.618, உத்திர பிரதேசத்தில் ரூ.693, பீகாரில் ரூ.689, மராட்டியத்தில் ரூ.668 ஆனால், தமிழ்நாட்டில் ரூ.113 மட்டுமே.

வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் தான் மிகமிகக் குறைவாக உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வரி குறித்த சராசரி குறித்து 2023 மார்ச் நிலையில் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அரவிந்த் வாரியரால்  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணங்களை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் வீட்டு உபயோக மின்கட்டணம் வேறு எந்த ஒரு மாநிலத்தையும்விட மிகமிகக் குறைவாக உள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top