தேனியில் வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 22ம் தேதி பாராதமாதா தேர்ப்பவனி நடக்கிறது.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் இரத்தினம்ஜீ தலைமை வகித்தார். தேனி நகர துணைத்தலைவர் சிவா ஜீ முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் க.ராமராஜ் ஜீ வழிநடத்தினார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தீர்மானம் (1) இந்து எழுச்சி முன்னணி தொடங்கப்பட்டதில் இருந்து தேனியில் பாரதமாத தேர்ப்பவனி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பாரதமாதா தேர்ப்பவனி வருகிற 22.12.2024 ஞாயிற்றுக்கிழமை தேனியில் நடக்கிறது. இந்த ஆண்டு தேர்ப்பவனியை மிக, மிக சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் (2): மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தேனி மாவட்ட இந்துஎழுச்சி முன்னணி மகிழ்வோடு வரவேற்கிறது. இந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு கொண்டு வர வேண்டும்.
தீர்மானம் (3): பங்களாதேஷில் இன்று வரை அங்கு வாழும் ஹிந்துக்கள் மீது அங்குள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பங்களாதேஷ் இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு விரைந்து இதற்கு ஒரு அதிரடியான தீர்வை காண வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகிறது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.