சோழவந்தான் :
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில் பெண்கள் விளக்கேற்றி ஐயப்பனை வழிபட்டனர். ஐயப்பன் கோவில்
விழா குழுவினர் சார்பாக விளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு திரி எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை, விழா கமிட்டியாளர்கள், சந்தோஷ் மற்றும் தங்கப்பாண்டி மற்றும் குருநாதர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர்.பொதுமக்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.