Close
டிசம்பர் 18, 2024 3:16 மணி

மதுரையில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்..!

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி

மதுரை :

மதுரை, பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தில்லை நடராஜன், வயது 52. இவர் மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு ரேஷன் கடையில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

மதுரை உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா தலைமையிலான போலீசார், பழங்காநத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த மினி லோடு வேனை சோதனை செய்னர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த வேனில் அவற்றை எடுத்து வந்த, தில்லை நடராஜனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top