சிவகங்கை:
தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் பழைய தன்னோட்டக் குழாய்களுடன், புதியதாக பதிக்கப்பட்டுள்ள இரும்புக் குழாய்களை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளையதினம் 18.12.2024 மற்றும் 19.12.2024 ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் கூறி இருப்பதாவது :
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), திருச்சி முத்தரசநல்லூர் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் பழைய தன்னோட்டக் குழாய்களுடன் (PSC Pipes), புதியதாக பதிக்கப்பட்டுள்ள இரும்புக் குழாய்களை (MS Pipes) இணைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, சிவகங்கை மாவட்டத்தில் நாளையதினம் 18.12.2024 மற்றும் 19.12.2024 ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.