மதுரை:
மதுரை மாவட்டத்தில், விதிகளை மீறி அபே ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், உசிலம்பட்டி, செக்கானூரணி, கருப்பாயூரணி, வரிசூர், மேலூர், அழகர் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் அபே ஆட்டோக்கள் விதிகளை மீறி இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில், அரசு சிட்டி பஸ்கள் போல ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. அவ்வாறு இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பொதுமக்களை கட்டாயப்படுத்தி பயணிக்க வைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை நகரை பொருத்தமட்டில், மதுரை அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் பஸ் நிறுத்தம், மதுரை அண்ணா நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம் ,அரசு மருத்துவமனை, புதூர், கே. கே. நகர் ஆகிய பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்திக் கொண்டு, பொதுமக்கள் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்களில் பயணிக்க இடையூறாக உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பலமுறை மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மதுரை போக்குவரத்து துணை ஆணையர், உதவி ஆணையாளர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும், மதுரையில் இயக்கப்படும் அபே ஆட்டோகளை கட்டுப்படுத்த, ஆர்வம் காட்டு வில்லையென, கூறப்படுகிறது.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை, ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த ஏன் போலீசார், தயக்கம் காட்டுகின்றனர் என, தெரியவில்லையாம். தலைக்கவசம் இல்லாமல், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் நபர்களை பாய்ந்து பிடிக்கும் போலீசார், விதிகளை மீறும் அபே ஆட்டோக்களை கட்டுப்படுத்த ஏன்
ஆர்வம் காட்டவில்லை என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எலிப்பியுள்ளனர்.
ஆகவே, மதுரை மாநகர காவல் ஆணையர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி, பொதுமக்களுக்கும் விதிகளை மீறி செயல்படும் அபே ஆட்டோக்களை கட்டுப்படுத்துவதுடன், மதுரை நகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மாநகராட்சியின் கவனத்தை கொண்டு சென்று சாலையை சீரமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மாநகராட்சி மேயர், ஆணையாளர், வார்டு கவுன்சிலர்கள், உதவி ஆணையாளர்கள்,உதவிப் பொறியாளர்கள் நகரில் குண்டும் குழியும் உள்ள சாலைகளை பார்வையிட்டு சீரமைப்புடன் சாலைகளை தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.