Close
டிசம்பர் 19, 2024 1:40 காலை

திருவண்ணாமலை உழவர் பேரியக்க மாநாடு பாமகவுக்கு திருப்புமுனை மாநாடாக அமையும்..!

உழவர் மாநாடு குறித்து காஞ்சியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி

காவிரி- கோதாவரி இணைப்பு மட்டுமே நீர் பற்றாக்குறை நீக்கும் என்பதால் மத்திய மாநில அரசுகள் அதனை செயல்படுத்த வேண்டும்..

வரும் 21ஆம் தேதி திருவண்ணாமலையில் உழவர் பேரியக்க மாநாடு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் மாவட்ட முழுவதும் பாமக நிர்வாகிகளால் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர பேரூராட்சி ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக பாமகவின் கௌரவத் தலைவர் ஜிகே மணி கலந்து கொண்டு மாநாடு குறித்து பல்வேறு விளக்க உரை அளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் பேசும் போது, பாலாற்றில் தடுப்பணைகள், விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகளை உருவாக்குதல், பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்டவைகளை மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

சோறு போட்ட காஞ்சிபுரம் மாவட்டம் தற்போது காய்ந்த மாவட்டமாக உள்ளது என குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஜி.கே.மணி, தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம் என்பதும், மழைநீர் அனைத்தும் தடுப்பணைகள் மற்றும் ஏரிகள் தூர்வாராததால் நீர் சேமிப்பு என்பது இல்லை என்பதால், அண்டை மாநிலங்கள் உள்ள நதிகளை இணைக்க வேண்டும்.

கோதாவரி காவிரி ஆறுகள் இணைப்பு என தொடர்ந்து மாநிலம் முழுவதும் மத்திய அரசு இணைக்கும் முயற்சியும் , அதற்கு மாநில அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்பது நிரந்தர தீர்வாக இருக்கும் என தெரிவித்தார்.

மாநாடு என்றாலே பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பது அனைத்து தரப்பினருக்கும் தெரியும், மாவட்ட மாநாடு மாநில மாநாடு கிராம மாநாடு என அனைத்தையும் திரும்பிப் பார்க்கும் வகையில் நடத்திய நிலையில், கடந்த காலங்களில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது திருவண்ணாமலை உழவர் பெரிய மாநாடு பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கும் நிர்வாகிக்கும் புது தெம்பை தரும் என்பது 2026 தெரியவரும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் உமாபதி, ஒன்றிய செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top