Close
டிசம்பர் 18, 2024 8:25 காலை

எம்.பி.பி.எஸ் சீட் எண்ணிக்கையில் முதல் இடத்தை இழந்த தமிழகம்..!

மருத்துவப்படிப்பு -கோப்பு படம்

இளங்கலை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., சீட் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருந்த தமிழகம், 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. முதல் இடத்தை கர்நாடகா பிடித்துள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்பு இடங்களை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

அதன்படி 2023-24ம் கல்வி ஆண்டில் 1,08,940 இடங்கள் இருந்த நிலையில், 2024-25ம் கல்வி ஆண்டில் 118,137 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் பார்லிமென்டில் பேசுகையில் தெரிவித்தார்.

இதில் 60,422 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 57,715 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம்பெற்றுள்ளன.

அதிக இளங்கலை மருத்துவ படிப்பு இடங்களை கொண்ட மாநிலம் விவரம் பின்வருமாறு:

மருத்துவ படிப்பு சீட் எண்ணிக்கையில் கடந்த 2023-24ம் கல்வி ஆண்டில் முதல் இடத்தில் இருந்த தமிழகம் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையாக பார்த்தால் உத்தரப் பிரதேசம் 86, மகாராஷ்டிரா 80, தமிழகம் 77, கர்நாடகா 73, தெலங்கானா 65 எனப் பெற்றுள்ளன.

அந்தமான் நிகோபார், அருணாசலப் பிரதேசம், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி, கோவா, மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மருத்துவக் கல்லூரி உள்ளது.

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரி உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கோரிக்கை வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., இடங்கள் எண்ணிக்கை பொறுத்தவரை, 11 மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சிலுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கும் பட்சத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் கூடுதலாக 550 இடங்கள் தமிழகத்துக்கு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top