Close
ஏப்ரல் 4, 2025 10:54 காலை

ஒடிஷாவில் இருந்து கஞ்சா கடத்திய 2 இளைஞர்கள் கைது..!

கஞ்சா கடத்தி கைதாகியுள்ள சென்னையைச் சேர்ந்த அருண் பாண்டியன் (வயது 28), நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் திலீபன் (வயது28).

ஒடிஷாவில் இருந்து 6- கிலோ கஞ்சா கடத்தி வந்த சென்னை மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 2- வாலிபர்கள் திருத்தணி அருகே போலீஸ் சோதனை சாவடியில் கைது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன் பாடி போலீஸ் சோதனைச் சாவடியில் வழியாக கஞ்சா கடத்தி வருவதாக வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் அவருக்கு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் அவரது சிறப்பு தனி படை உதவி ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போலீசார் திருத்தணி பொன்பாடி சோதனைச் சாவடியில் ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் தடம் எண்- 201 என்ற அரசு பேருந்தில் சோதனை மேற்கொள்ளும் போது அந்த பேருந்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த இரண்டு பேரை பிடித்து

விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் வைத்திருந்த உடமையில் 6- கிலோ கஞ்சா ஒடிஷா மாநிலத்திலிருந்து ஆந்திரா வழியாக ரயிலில் கடத்தி வந்து திருப்பதியில் இருந்து அரசு பேருந்தில் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

சென்னை சேர்ந்த அருண் பாண்டியன் (வயது 28), நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் சேர்ந்த திலீபன் (வயது28) இருவரையும் கைது செய்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து திருத்தணி மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மதுவிலக்கு போலீசார், இவர்கள் இருவர் மீதும் கஞ்சா கடத்தி வந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் இவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர் போலீசார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top