Close
டிசம்பர் 19, 2024 9:58 காலை

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுன் பாமகவில் சேர விரும்பினால் பரிசீலிப்போம்..!

உழவர் மாநாடு குறித்த ஆலோசனைக்கூட்டம் திருவள்ளூரில் பாமக கௌரவத்தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்குப்பின்னர் பேட்டி அளித்த ஜி.கே.மணி

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் பாமகவில் சேர விருப்பம் தெரிவித்தால் பரிசீலிப்போம். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் : திருவள்ளூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி திருவள்ளூரில் பேட்டி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்து திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமகவின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பால யோகி, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு உழவர் மாநாட்டிற்கு ஒன்றியங்கள் வாரியாக எவ்வளவு பேர் கலந்து கொள்ள உள்ளனர் என்பதை குறித்து கேட்டறிந்தார்.

மேலும் இந்த பொதுக்குழுவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்,

வெங்கத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்,

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி

பாமக நிறுவனத் தலைவர் நீர் மேலாண்மை குறித்து சொல்வது போல் செய்திருந்தால் இன்று ஆறுகளின் வழியாக உபரி நீர் வீணாக சென்றிருக்காது, கடுமையான வெள்ள சேதம் ஏற்பட்ட இடங்களில் திருவள்ளூர்,காஞ்சிபுரம், கடலூர்,விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடும்பத்திற்கு 2000 மட்டுமே அறிவித்திருப்பது பெரிய அநீதி.

தெற்கே தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்ட போது 6000ரூபாய் கொடுத்த தமிழ்நாடு அரசு தற்போது வட மாவட்டங்களில் 2000 மட்டுமே நிதி உதவி வழங்குவது ஏற்படுவது அல்ல ஏற்பட்ட பயிர் சேதங்களை கணக்கிட்டு உரிய நிதி வழங்க வேண்டும்,

திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம்,கடலூர், கோயம்புத்தூர்,போன்ற பெரிய மாவட்டங்களை நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்க வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் சொந்த மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது கண்டனத்துக்குரியது,80% விழுக்காடு தமிழ்நாடு மற்றும் சொந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை நிறுவனங்கள் வழங்க வேண்டும்,

தொழிலாளர் சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஒப்பந்த ஊழியர்களின் நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள செவிலியர் பற்றாக்குறையை நீக்க வேண்டும் மற்றும் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நீண்ட நாள் கோரிக்கை புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு புதிய பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் மற்ற கட்சிகள் வேகமாக வேலை செய்கிறது என கூறப்படுவது தவறான கருத்தாகும் தேர்தல் 2026 இல் வர உள்ளதை எடுத்து அனைத்து கட்சிகளும் எப்பொழுதும் இதுபோன்ற வேகமாக தான் வேலை செய்யும்,

வருகின்ற 28.ஆம் தேதி பாமக சார்பில் நடைபெறும் பொது குழுவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சரின் பேச்சு பாமக நிர்வாகிகளை மிகவும் புண்படுத்தி இருக்கிறது. விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா பாமகவிற்கு வருவதாக இருந்தால் அதனை பாமக பரிசீலிக்கும் எனவும் கௌரவத் தலைவர் ஜி. கே.மணி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமகவைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top