Close
டிசம்பர் 18, 2024 11:55 காலை

உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் மரியாதை..!

இறந்த ஜல்லிக்கட்டு காளை

உசிலம்பட்டி:

மதுரை,உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காளை உடல்நலக் குறைவால் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள் மேள தாளத்துடன் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோட்டை மலைப்பாண்டி என்பவரது சிந்து பெரிய காரி என்ற ஜல்லிக்கட்டு காளை, பாப்பிநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு மட்டுமல்லாது, புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட வாடிவாசல்களில் பங்கேற்ற இந்த காளை எந்த ஜல்லிக்கட்டிலும் பிடிபடாமல் ஊருக்கு பெருமை சேர்த்தாகவும், பிரோ, கட்டில், தங்க காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வென்று கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதியுற்று வந்த இந்த காளைநேற்று இரவு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. ஊருக்கே பெருமை சேர்த்த ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்ததை அடுத்து சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள் ஒன்றிணைந்து, மனிதன் உயிரிழந்தால் செய்யப்படும் ஏற்பாடுகள் போல பந்தல் அமைத்து, மேள தாளத்துடன், ஒலிப்பெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பபடுகிறது.

மேலும் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார முக்கிய நிர்வாகிகளும் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.இன்று மாலை இந்த காளையின் நல்லடக்கம் கோட்டை மலைப்பாண்டியின் தோட்டத்தில் நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top