Close
ஏப்ரல் 1, 2025 1:31 காலை

அலங்காநல்லூர் காளியம்மன் கோயில் பொங்கல் உற்சவம் : நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

காவடி எடுத்து வரும் பக்தர்கள்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயிலுடன் இணைந்த காளியம்மன் கோயில் பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியின் முன்னோட்ட நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த விழா ஆண்டுதோறும் காளியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த பின்னரே உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் கரகம் ஜோடித்தல், மாவிளக்கு எடுத்தல், பக்தர்களுக்கு கூல் காய்ச்சி வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலையில் பக்தர்கள் தீச் சட்டி எடுத்தல், வேல் குத்துதல், வண்ண மயில் காவடி, கரும்பு தொட்டில் கட்டுதல், உள்ளிட்ட நேர்த்திகடனை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து இன்று மாலை கரகம் ஆற்றில் கரைப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top