Close
டிசம்பர் 18, 2024 3:30 மணி

மேம்பால சேதங்களை நீக்கும் முறை : ஐஐடி வல்லுனர் ஆய்வு..!

மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைப்பது குறித்து ஐஐடி வல்லுநர் ஆய்வு செய்தார்.

மேம்பாலங்களில் ஏற்படும் சேதப் பகுதிகளை முறையாக நீக்குதல் குறித்து ஐஐடி வல்லுநர் இன்று செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு சாலைகள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு வழி சாலைகளாக இருந்தது தற்போது நான்கு வழி சாலைகளாக மாறி உள்ளது.

இதில் குறிப்பிடும்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாலாஜாபாத் வண்டலூர் சாலையில் ஒரகடம் சந்திப்பில் கட்டப்பட்ட மேம்பாலம், 22 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் செவிலிமேடு அருகே பாலாற்று மேம்பாலம் என இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது.

மேலும் வண்டலூர் வாலாஜாபாத் சாலை தற்போது நான்கு வழி சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரகடம் உயர்மட்ட பாலம் கனரக வாகனங்கள் அதிகம் சென்றதால் தற்போது பாலத்தின் பல்வேறு பகுதிகளில் தார் சாலை மற்றும் காங்கிரீட்டில் சேதம் ஏற்பட்டு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வகையில் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சேதமடைந்த பகுதிகளை அவ்வப்போது நெடுஞ்சாலை துறையினரும் பணிகளை மேற்கொண்டு சீரமைத்தும் வரும் நிலையில், மழைக் காலங்களில் மீண்டும் சேதம் ஏற்படுகிறது.

இந்நிலையில் இதனை தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சரியாக அதிர்வுகள் மற்றும் சாலை பழுது நீக்கும் பணிகளை சரி வர செய்யாத நிலையில் தற்போது இப்பணிகள் அனைத்தும் மாநில நெடுஞ்சாலை துறை இடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பணிகளை நிரந்தரமாக தீர்வு காணும் வகையில் ஒரகடம் மேம்பாலம் மற்றும் செவிலிமேடு மேம்பாலங்களை ஐஐடி வல்லுனர் அப்பாராவ் ஆய்வு மேற்கொண்டார்.

அவருக்கு காஞ்சிபுரம் கோட்ட நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் , உதவி பொறியாளர் ஆகியோர் ஐ.ஐ.டி வல்லுனருக்கு இச்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை, அதன் எடை , கடந்த காலத்தில் சேதம் ஏற்பட்ட நிலையில் அதற்க்காக மேற்கொண்ட பணிகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

ஆய்வு மேற்கொண்ட வல்லுனர் இது குறித்த ஆய்வறிக்கை அளித்து அதிர்வுகள் குறைத்தல் போன்றவைகளுக்கான அறிக்கையின் அடிப்படையில் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top