சட்டமேதை அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் குமரன் தலைமையில் மாகரல் அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் மிகவும் இழிவு படுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமிதாவை கண்டித்து தமிழக முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் அறிவுரையின் பேரில், காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் குமணன் தலைமையில், மாகரல் அம்பேத்கர் சிலை முன்பு திமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்ட மேதை அம்பேத்கர் இழிவு படுத்திய மத்திய உள்ள உள்துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், பாஜக இனி ஒருபோதும் அவரை இழிவு படுத்தும் செயலை மேற்கொள்ளக்கூடாது என கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விசிக மாவட்ட செயலாளர் எழிலரசு, ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய துணை அமைப்பாளர் வீரராகவன், ஒன்றிய கவுன்சிலர் பரசுராமன், திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆசூர் கன்னியப்பன், இளமது , தயாளன், தட்சிணாமூர்த்தி, ராஜகோபால், திருநாவுக்கரசு , காங்கிரஸ் நிர்வாகிகள் சரவணன், இன்பநாதன், எல்லப்பன், விசிக நிர்வாகி செந்தில், அன்பு , திமுக இளைஞரணி சவீன், தீபக், மணி , நவீன் , பிரவீன் உள்ளிட்ட திமுக ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.