ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலையில் செல்லும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்க காவல்துறையில் ஏலம் விடப்படுகிறது என தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் எஸ்.பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு மாநில மணல் ஆரி உரிமையாளர் சங்கங்களின் குற்ற அமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் போக்குவரத்து காவல் துறையின் அராஜக போக்கை கைவிட வேண்டும் எனக் கூறி மனு ஒன்றை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் யுவராஜ் பேசுகையில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகிறது.
குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்படும் காவல்துறையினர் கனரக லாரிகளை வாகனத் தணிக்கை எனும் பெயரில் மடக்கி மாமூல் வசூலித்து வருவதாகவும், ஏற்கனவே பல லட்சம் ரூபாய் வரி செலுத்தியும், டோல்கேட் கட்டணம் என பலவற்றை தொடர்ந்து செலுத்தி வரும் நிலையில் வாகனங்களை மடக்கி அபராதம் விதித்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.
மேலும் தொடர்ந்து காவல்துறையினர் மாமுல் வசூலிப்பதையே குறியாக கொண்டு செயல்படும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியினை எஸ்பி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாமுல் வசூலிக்க காவல்துறையில் ஏலம் விடப்படுவதாகும் பெரும் குற்றம் சாட்டு முன் வைத்துள்ளார். காவல்துறையினர் மற்றும் அவரது மனைவி மற்றும் ஏஜென்ட்களின் பெயர்களுக்கு ஜிபே மூலம் பணம் செலுத்தும் வீடியோ மற்றும் அதற்கான ஆதாரங்களும் தாங்கள் வைத்துள்ளதாகவும்,
ஓரிரு நாளில் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளதால் அதன் பிறகு தொடர்பு இது தொடர் கதையாக நடந்தால் விரைவில் நாமக்கல்லில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் வேலை நிறுத்தம் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்தார்
காவல்துறை மாமுல் வசூலிக்க ஏலம்விடுவதாக பகிரங்கமாக எஸ்பி அலுவலகம் முன்பு குற்றம் சாட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.