தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சி புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சி ஆகும். நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாரிடம் சுரண்டை நகர் மன்றம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வார்டு எண் 7 மற்றும் 8 பகுதிகளில் அங்கன்வாடி கட்டிடமும், வார்டு எண் 11-ல் நியாய விலை கடை கட்ட மொத்தம் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.