Close
டிசம்பர் 25, 2024 5:57 காலை

அனுமதியின்றி உருவபொம்மை எரிப்பு,சாலை மறியல் : விசிக மீது வழக்கு பதிவு..!

அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த விசிகவினர்

மத்திய உள்துறை அமைச்சர் உருவ பொம்மை எரித்தல் மற்றும் அனுமதி இன்றி சாலை மறியல் செய்த 97 விசிக நபர்கள் மீது விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது..

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்ட மேதை அம்பேத்கர் குறித்து விமர்சனம் செய்ததாக கடும் அமளி ஏற்பட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த இரு நாட்களாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடித்து வருகின்றனர்.

அவ்வகையில் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பாஜகவிற்கான எதிரான கட்சிகள் அனைத்தும் சாலை மறியல் உருவ பொம்மை எரித்தல் என நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் எழிலன், பாசறை செல்வராஜ் , மதி ஆதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் அமித்ஷா உருவ பொம்மை எரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 97 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top