Close
டிசம்பர் 23, 2024 6:57 மணி

அலங்காநல்லூரில் அமித்ஷா உருவப்படத்தை எரித்து ஆதிதமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்..!

போராட்டம் நடத்திய ஆதி தமிழர் பேரவை

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுகடையில், அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆதிதமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் தமிழ்குமரன் தலைமை தாங்கினார். கலை இலக்கிய அணி செயளாலர் செல்வம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அதியவன், மாவட்ட அமைப்பாளர் பகலவன், மகளிரணி சாந்தி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், விவசாய அணி பாண்டி, தூய்மை தொழிலாளர் அணி ஒன்றிய செயலாளர் முத்துசிவா, கிளை செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா உருவப்படத்தை தீ வைத்து எரித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top