Close
டிசம்பர் 24, 2024 2:50 காலை

வாடிப்பட்டி 6வது வார்டில் குடிநீர் தொட்டி திறப்பு..!

6வது வார்டில் திறக்கப்பட்ட குடிநீர் தொட்டி

வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 6வது வார்டு புலி வீடு அருகில் சின்டெக்ஸ் தொட்டியுடன் கூடிய ஆழ்துளை குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

இந்த குடிநீர் குழாயினை பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் கார்த்திக், இளநிலை உதவியாளர்கள் முத்துப்பாண்டி, கார்த்திக் சுகாதார பணி மேற்பார்வையாளர் சுந்தர்ராஜன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முயற்சியாளர் கவுன்சிலர் பூமிநாதன் வரவேற்றார். இதில் இரண்டு குழாய்களுடன் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதில் மகாலட்சுமி, சரோஜா, பாரதி ராஜேஸ்வரி, பானுமதி,ராதா கிருஷ்ணன், வெள்ளைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  முடிவில் முன்னாள் கவுன்சிலர் திருச்செல்வி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top