Close
டிசம்பர் 24, 2024 5:55 மணி

மாம்பாக்கம் சிப்காட் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி..! அமைச்சர் பங்கேற்பு..!

மாம்பாக்கம் சிப்காட் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி.ராஜா

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், மாம்பாக்கம் சிப்காட் வளாகத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொழில்துறை அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி.ராஜா மரக்கன்றுகள் நட்டு, துவக்கி வைத்தார்.

மரக்கன்றுகள் நடும் விழாவில் தமிழக தொழில்துறை அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி.ராஜா மரக்கன்றுகள் நட்டு, துவக்கி வைத்து தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடை பெற்று வருகின்றன.

 

சிப்காட் நிறுவனம் 23 மாவட்டங்களில், 42,000 த்திற்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், 7 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 42 தொழில்பூங்காக்களை உருவாக்கி மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு குறிப்படத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது.

சிப்காட் நிறுவனம் நீடித்து நிலைபெறத்தக்க வகையிலான வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தொழிற்பூங்காக்கள் விளங்கிட, ஏற்கனவே 650 இலட்சம் மரக்கன்றுகள் வனத்துறையினர் மூலம் சிப்காடின் திறந்த வெளிப்பகுதிகள் மற்றும் சாலையோரங்கள் நடவு செய்யபட்டுள்ளது.

அத்தோடு 50,000 பனைமரக் கன்றுகள். ஓசூர், பர்கூர் மற்றும் குருபரப்பள்ளி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொழில் பூங்காக்களின் முன்னோடித் திட்டமாக நடவு செய்யபட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

சிப்காட் நிறுவனம் எதிர் வரும் ஆண்டிற்குள் 10 இலட்சம் மரக்கன்றுகளை நடுவதை இலக்காக கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களிலும் ஒரே நாளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக திருப்பெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உள்ள மாம்பாக்கம் சிப்காட் பகுதியில், 2000 மரக்கன்றுகளை நடும் விழாவினை மரக்கன்றுகள் நட்டு, துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்போது நடப்படவுள்ள ஒரு இலட்சம் மரக்கன்றுகளை சேர்த்து மொத்தமாக 7.50 இலட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து சிப்காட் நிறுவனம் பராமரிப்பு செய்து வருகிறது.

 

தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) அதன் தொழில் பூங்காக்களை மிகவும் நிலையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் மற்றும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறப்பாக செயல்படுவதின் வகையிலும் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பெரும் இலக்கான ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது என தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிப்காட் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் கி.செந்தில்ராஜ், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி , சிப்காட் செயல் இயக்குநர் சினேகா, சிப்காட் கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.தேவயிரக்கம், சிப்காட் நிர்வாகப் பொறியாளர் ஞானவடிவு, சிப்காட் ஆலோசகர் தங்கபிரகாசம், சிப்காட் திட்ட அலுவலர் தினேஷ்குமார், மாநில நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் பி.என். குணாநிதி, சிப்காட் ஊழியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ , மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top