விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாவட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்க ஆட்சியர் கலைச்செல்வி கூட்டத்திலேயே உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் விவசாய நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு முன்பாக வேளாண் இயந்திரவியல் துறை சார்பில் ஐந்து விவசாயிகளுக்கு பவர்டில்லர் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் பல லட்சம் மதிப்பிலான விவசாய கடன்கள் மற்றும் விவசாய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் தங்கள் பகுதியில் நிலவும் குறைகளையும் அதற்கான நிவர்த்திகளை விரைவாக மேற்கொள்ளவும் கோரிக்கை வைத்தனர்.
அவ்வகையில் உத்திரமேரூர் சேர்ந்த விவசாயி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச் சாலை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விவசாய பாசன கால்வாய்களை முற்றிலும் மூடி விட்டு பாசனம் இல்லாமல் சுமார் 150 ஏக்கர் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்க ஆட்சியர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்ட நிலையில், மாவட்ட அதிகாரி என்று கூட்டத்திற்கு வரவில்லை.
கூட்டத்திற்கு மற்றும் ஒரு நெடுஞ்சாலை துறை அலுவலர் வந்த நிலையில் அவர் பதில் கூற முயற்சித்த போது மாவட்ட ஆட்சியர் அதற்கு மறுப்பு தெரிவித்து மாவட்ட அதிகாரி மட்டுமே பதில் அளிக்க வேண்டும் எனவும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம் எனவும் கடுமையாக தெரிவித்தார்.
மேலும் இன்று கூட்டத்திற்கு வராத மாவட்ட அதிகாரிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு ஷோகேஸ் நோட்டீஸ் வழங்குமாறு அதற்கான கணக்கெடுப்புகளை எடுத்து தன்னிடம் சரி பார்த்துக் கொண்ட பின் அவர்களுக்கு வழங்க வேண்டும் என உடன் இருந்த அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள முக்கிய ஏரிகளின் பாசனங்களின் கால்வாயில் நிலையினையும் உரிய ஆய்வுகள் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
கூட்டத்திலேயே கலந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
இதுபோன்ற மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் முக்கிய கூட்டத்திற்கு மாவட்ட அதிகாரிகள் வந்தால் மட்டுமே அதற்கான உரிய தீர்வை அளிக்க முடியுமே தவிர அலுவலகத்தில் பணி புரியும் இளநிலை அலுவலர்கள் எந்தவித தீர்வையும் அவர்களால் தீர்க்கமாக கூற முடியாது என்பது அனைவரும் அறிந்த நிலையில் இன்று ஆட்சியரின் செயல் விவசாயிகள் பெருத்த வரவேற்பு பெற்றது.