மதுரை :
மதுரை மாவட்டத்தில், உள்ள கோயில்களில் பஞ்சமி முன்னிட்டு வராகி அம்மனுக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை அண்ணாநகர் யானைக் குழாய் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில், பஞ்சமி முன்னிட்டு, வராகி அம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும், அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அம்மன் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள், மஞ்சள் மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவில் அர்ச்சகர் மணிகண்ட பட்டர் சிறப்பு பூஜைகளை செய்து பிரசாதங்களை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதே போல, மதுரை மேலமடை தாசில்தார்நகர் சௌபாக்கியவிநாயகர் ஆலயத்திலும், மதுரை பாண்டி கோவில் ஜே. ஜே. நகர் வரசக்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்திலும் உள்ள வராஹி அம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது.
பக்தருக்கு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர். இக்கோயில்களில், மாந்தோறும் பஞ்சமி முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.