திருவள்ளூர் அடுத்த ராஜாஜிபுரம் ஹரே ராம் நகரை சேர்ந்தவர் வினோத் (35). இவர் நாக்பூர் மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வினோத் மற்றும் குடும்பத்தினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிக் கொண்டு சொந்த ஊரான ஊத்துக்கோட்டை அடுத்த ராஜபாளையம் கிராமத்திற்கு சென்றனர்.
இன்று காலை வீட்டுக்கு வந்த பார்த்தபோது பூட்டிய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 13 சவரன் தங்க நகை ரூபாய் 10 ஆயிரம் மர்ம நம்பர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து வினோத் திருவள்ளூர் நகர காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து திருவள்ளூர் பகுதிகளில் தொடர்பு கொள்ள சம்பவங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.