தென்காசியில் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.
தென்காசி மாவட்டம் தென்காசி, கோகுலம் காலனியில் சுப்பிரமணியன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இரவில் தனது வீட்டின் முன் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக தென்காசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் தென்காசி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்திருந்த சிறப்பு நிலை அலுவலர் ஜெயரத்தினகுமார் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சுமார் 10 அடி நீளம் உடைய மலை பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பாம்பானது குற்றாலம் மலைப்பகுதியில் விடப்பட்டது.
குடியிருப்பு பகுதியில் மலை பாம்பு பதுங்கி இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.