வாடிப்பட்டி :
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக 8997 சமையல் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்புதலை வரவேற்றும், அரசாணை 95 மாற்றம் செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய கிளைத் தலைவர் சூசைநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திக் ராணி முன்னிலை வகித்தார்.அரசு ஊழியர் சங்க வட்டக்கிளைச் செயலாளர் செந்தில்
ராஜா ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
ஒன்றியச் செயலாளர் பிச்சையம்மாள் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.இதில், ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க வட்டக் கிளை துணைத் தலைவர் ஆனந்தன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.