Close
டிசம்பர் 23, 2024 3:57 மணி

திருப்போரூர் முருகனுக்கு சொந்தமான ஐபோன்..!

திருப்போரூர் கோயில் உண்டியலில் தவறுதலாக போடப்பட்ட ஐபோன்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோயிலில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தால் அந்த கோயிலின் முருகனுக்கு ஒரு ஐபோன் சொந்தமாகியுள்ளது.

திருப்போரூர் கோயிலுக்கு அம்பத்துாரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தரிசனம் செய்ய சென்றிருந்தார்.

குடும்பப் பிரச்னை காரணமாக தினேஷ் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது, அவரது ‘ஐபோன் 13புரோ’ ரக மொபைல் போனையும் தவறுதலாக உண்டியலில் போட்டுவிட்டார். செல்போன் உண்டியலில் விழுந்துவிட்டதை கோயில் நிர்வாகத்திடம் கூறி மொபைல்போனை எடுத்துக்கொடுக்கும்படிக் கேட்டுள்ளார்.

அதற்கு கோயில் நிர்வாகத்தினர், ‘கோயில் உண்டியலில் போடப்படும் அனைத்தும் சுவாமிக்குத்தான் சொந்தம்’ என்று கூறியுள்ளனர். மேலும், உண்டியல் காணிக்கை எண்ணும்போது தகவல் தருகிறோம் என்று கூறி அனுப்பிவிட்டனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாரிகள் முன்னிலையில் கோயில் உண்டியல் திறக்கபப்ட்டு அதில் சேர்ந்த காணிக்கைப் பணம் எண்ணப்பட்டது. ஐபோனை உண்டியலில் போட்ட தினேஷுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் உண்டியல் திறக்கும்போது வந்திருந்தார்.

உண்டியலை திறந்து பணத்தை வெளியே எடுத்தபோது, தினேஷின் மொபைல் போனும் இருந்தது. அப்போது தினேஷ் மொபைல் போனை கேட்டுள்ளார். அதற்கு கோயில் நிர்வாகத்தினர், ‘உண்டியலில் போட்டவை முருகனுக்குத்தான் சொந்தம். மொபைல் போனை தர முடியாது’ என்று கூறிவிட்டனர்.

வேண்டுமென்றால், உங்கள் மொபைல் போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். அதற்கு தினேஷ், தன்னிடம் தரவுகளை டவுன்லோடு செய்ய லேப்டாப் எதுவும் தற்போது இல்லை. ரெண்டு மூணுநாள் கழித்து லேப்டாப் ஏற்பாட்டுடன் வந்து தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்கிறேன் என்று தினேஷ் கூறியுள்ளார். அதன் பின்னர் அந்த மொபைல்போன், அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top