Close
டிசம்பர் 23, 2024 7:56 காலை

வாடிப்பட்டி அருகே கல்குவாரி பிரச்சனை : சமூக ஆர்வலர் மீது கொலை வெறி தாக்குதல்..!

கல்குவாரி -கோப்பு படம்

வாடிப்பட்டி :

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனுசாமி மகன் ஞானசேகரன் (வயது 32). இவர் சமூக ஆர்வலர். இவர் அந்த பகுதியில் உள்ள கல்குவாரிகளின் முறை கேடுகள் பற்றி கலெக்டர் மற்றும் ஊடகங்களில் புகார் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை 7 மணிக்கு தனது வீட்டின் முன்பாக ஞானசேகரன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இராமையன்பட்டி அயோத்தி என்பவரின் கல் குவாரியில் வேலை பார்க்கும் முருகன் என்பவர் இரும்பு கம்பி எடுத்து வந்து ஞானசேகரனை சரமரியாக தாக்கி கழுத்தைப் பிடித்து நெறித்து ஆபாசமான வார்த்தைகளால் பேசி,கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

உடனே ஞானசேகரன் ஐயோ..அம்மா என்று சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வர முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயமடைந்த ஞானசேகரன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து முருகனை வலைவீசி தேடி வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top