Close
டிசம்பர் 23, 2024 8:32 காலை

சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் பணிகளுக்கான ஆலோசனை கூட்டம்..!

கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்த வாக்காளர் திருத்த முகாம் ஆலோசனைக்கூட்டம்

சிவகங்கை:

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025 பணியின் மேற்பார்வையாளர் மற்றும் புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனீஸ் சாப்ரா,மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஆஷா அஜித், தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணிகள் தொடர்பாக வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணிகள் தொடர்பாக வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுடன்,மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டத்தில் தெரிவிக்கையில்,

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களின் ஆலோசனை மற்றும் பொதுமக்களின் ஆலோசனை பெற்று, அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2025ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளவும், பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025 தொடர்பாக பணிகள் கடந்த 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பதிவுகளைத் திருத்தம் செய்தல் ஆகிய பணிகள் தொடர்பாக கடந்த 29.10.2024 முதல் 28.11.2024 வரை மனுக்களை அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் நேரடியாகவோ அல்லது https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அளிக்கலாம் என, தெரிவிக்கபட்டிருந்தது.

மேலும், கடந்த 16.11.2024, 17.11.2024 மற்றும் 23.11.2024, 24.11.2024 ஆகிய நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெறும் வகையில் சிறப்பு முகாம்களும் நடைபெற்றது. அதன்படி, 29.10.2024 அன்று 1198255 வாக்காளர்களும், அதில், 588036 ஆண் வாக்காளர்களும், 610159 பெண் வாக்காளர்களும், 60 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் முகாம்களின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட பணிகள் நிறைவுற்று, அதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகின்ற 06.01.2025 அன்று வெளியிடப்படவுள்ளது.

இம்முகாம்களின் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்தும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் அவர்களது முகவரியில் உள்ளனரா என்பதை உறுதி செய்திடும் பொருட்டு,சம்மந்தப்பட்ட வாக்காளர்களிடம் உரிய விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பணியும் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

அவ்வாறாக நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாகவும், அந்தந்த பகுதிகளில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் முறையாக மேற்கொண்டு, அதன் அறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகள் தொடர்பான விபரங்களை புள்ளி விபரங்களுடன் எடுத்துரைக்கலாம் என, சிவகங்கை மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025 பணியின் மேற்பார்வையாளர் மற்றும் புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் னீஸ் சாப்ரா, தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோர் விரிவாக புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட்வட்ஸ் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி, வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துக்கழுவன், தேர்தல் வட்டாட்சியர், அனைத்து வட்டாட்சியர்கள், மாநகராட்சி ஆணையாளர், நகராட்சி ஆணையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top