பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில்₹.15 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் புதிய காவல் உதவி மையக் கட்டிடத்தை ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கன்னிகைப்பேர் ஊராட்சியில் ₹.15 லட்சம் மதிப்பீட்டில் 56.சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு புதிய உதவி காவல் மைய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார் தலைமை தாங்கினார். பெரியபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பத்மஸ்ரீ,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்திய வேலு,மாவட்ட பிரதிநிதி கே.வி.வெங்கடாசலம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மேனகா சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் எஸ்.ஐ.விக்னேஷ் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி பங்கேற்று உதவி காவல் மைய கட்டிடத்தை ரிப்பன் பெட்டி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில்,
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குற்ற செயல்களை தடுக்கும் விதமாக கன்னிகைப்பேர் பஜார் மற்றும் முக்கிய வீதிகள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி இந்த காவல் உதவி மையத்தை கட்டுவதற்கு உதவிய ஊராட்சி நிர்வாகத்திற்கும், வியாபாரிகளுக்கும், நன்றி தெரிவித்து பேசிய அவர் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதால் பல்வேறு குற்ற செயல்கள் தடுப்பதற்கு பெரிதாக உதவியாக இருக்கும்.
சமீபகாலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் இதுபோன்ற குற்றவாளிகளை அடையாளம் காணவும், போக்குவரத்து விதி மீறல்களை ஈடுபட முயலபவர்களை எளிதாக அடையாளம் காணவும் பெரிதும் இந்த கேமராக்கள் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் விக்னேஷ், பொருளாளர் கோவிந்தராஜன்,கட்சி நிர்வாகிகள் நீதி, சமூக ஆர்வலர் கல்யாணி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பொன்னரசு நன்றி கூறினார்.