Close
டிசம்பர் 23, 2024 4:42 மணி

மரமே நடாத தலைமை ஆசிரியருக்கு சுற்றுச்சூழல் விருது..? கலெக்டரிடம் புகார் மனு..!

ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் மரம் நடாத தலைமை ஆசிரியருக்கு சுற்றுச்சூழல் விருதுக்கு பரிந்துரையா ? வட்டார கல்வி அலுவலர் மீது ஆட்சியிரிடம் புகார் மனு.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் என பல தரப்பினர் புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

வகையில் வாலாஜாபாத் வட்டார கல்வி அலுவலர் நந்தாபாய் மீது நடவடிக்கை எடுக்க கோரி புத்தேரி பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவர் புகார் மனுவினை ஆட்சியரிடம் அளித்தார்.

அம்மனுவில் , வாலாஜாபாத் வட்டார கல்வி அலுவலராக பணிபுரியும் நந்தாபாய் என்பவர் தலைமை ஆசிரியர், மாணவர்களை தரக்குறைவாக பேசி வருவதாகவும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படும் வகையில் அவரது நடவடிக்கைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் வேளியூர் நடுநிலை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திருமலை நாராயணன் என்பவர் இவருக்கு ஆதரவாக செயல்படுவதால் பள்ளி வளாகத்தில் மரம் நடுவதை ஊக்குவிக்கும் செயலுக்கான சுற்றுச்சூழல் பாராட்டு விருதுக்கு இவரை பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் பணி செய்யும் வேளியூர் நடுநிலைப் பள்ளியில் ஒரு மரம் கூட வைக்காத நிலையில் அவருக்கு சுற்றுச்சூழல் பாராட்டு சான்றிக்கு பரிந்துரை செய்தது எந்த விதத்தில் ஏற்புடையதும் எனவும், இது இது குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி பல்வேறு புகார்கள் கொடுக்கும் எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலையில் வட்டார கல்வி அலுவலர் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top