Close
டிசம்பர் 25, 2024 11:02 மணி

கப்பலூர் தொழிற்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் : முன்னாள் அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

மதுரை:

மதுரை,கப்பலூர் தொழிற்பேட்டையில், சிட்கோ தொழிலாளர்கள், குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு வருமுன் காப்போம் திட்டம் ஆரம்ப சுகாதார நிலையம் செக்கானூரணி, கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கம் இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் கப்பலூர் தொழிலதிபர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

முகாமில், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயக்குமார் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது:

மருத்துவர்கள் செவிலியர்களின் சேவை மிகவும் பாராட்டக்கூடிய ஒன்றாகும். தாய் பிள்ளையை பராமரிக்க மறந்தாலும் பிள்ளைகள் பெற்றோர்களை பராமரிக்க மறந்தாலும் மருத்துவர்களும் செவிலியர்களும் பராமரிக்க தவற மாட்டார்கள். அவர்களுடைய சேவை மிகவும் போற்றுதலுக்குரியது. அரசுகள் மாறினாலும் உங்களின் சேவை எப்போதும் மாறாது என பேசினார்.

முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, காசநோய், இதய நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்குமான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கப்பலூர் தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாத ராஜா, டாக்டர் உமா மகேஸ்வரி வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர்கள் ராஜரத்தினம், உமா, மாவட்ட நலக்கல்வியாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் தலைமையில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top