Close
டிசம்பர் 25, 2024 11:10 மணி

விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்..!

விக்கிரமங்கலம் கள்ளர் மேல்நிலைப்பள்ளி தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன

சோழவந்தான் :

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவ,மாணவிகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதனால் தமிழக அரசு உடனடியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்,

மேலும் தமிழக அரசு ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் வரை விக்கிரமங்கலம் கிராமத்தில் இருந்து ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு உரிய சம்பள பணத்தை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து வழங்குவதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விக்கிரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில்,

வரும் மார்ச் ஏப்ரல் மாதம் நடைபெறும் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில் தமிழக அரசு உடனடியாக விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்காக கல்வி அமைச்சர் மதுரை மாவட்ட ஆட்சியர் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளியில் நேரில் ஆய்வு செய்து எந்தெந்த ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என ஆய்வு மேற்கொண்டு அந்த பணியிடங்களுக்கு தேவையான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும் அதுவரை விக்கிரமங்கலம் கிராமத்தின் சார்பாக தற்காலிக ஆசிரியர்களை பள்ளி நிர்வாகத்தின் மூலம் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்படி தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டவுடன் அவர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்கு எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top