தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலீதநல்லூர் கிராமத்தில் உள்ள மருத ஊரணி தவசிதம்பரான் கோவில், லாட சன்னாசி மாந்திர தவசிதம்பிரான் கோவில், மருதணி மாடசாமி கோயில் வழிகாட்டி மாடன் மாடத்தி கோயில்,
வனபேச்சியம்மன் பஞ்சபாண்டவர் கோயில் தங்க பூணூல் தவசி தம்பிரான், ஐவராஜா கோயில் பொறுப்பாளர்கள் சேதுதுரை தலைவர், சுப்பையா பூசாரி, செந்தூர்பாண்டியன், ராமசாமி, சேது துரை, சண்முகையா, மூக்கையா, செந்தில் ஆகியோர் தலைமையில் 40 கிராமத்தை சார்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் சங்கரன்கோவில் அருகே மேலநீலீதநல்லூர் கிராமத்தில் மானூர், சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலீதநல்லூர் ஒன்றியங்களுக்காக அரசு சார்பில் மலகசடு மேலாண்மை சுத்திகரிப்பு மையம் அமையவுள்ள நிலையில் மலகசடு மேலாண்மை சுத்திகரிப்பு மையம் அமைந்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
அப்பகுதி மக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மலகசடு மேலாண்மை நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்த கிராமத்தில் பல்வேறு ஆலயங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. நீர் நிலைகள் அமைய பெற்றுள்ள இந்த இடத்தில் மலகசடு மேலாண்மை சுத்திகரிப்பு மையம் அமைந்தால் நிலத்தடி நீர் கெட்டு துர்நாற்றம் ஏற்படும் நிலை ஏற்படும்.
இந்த பகுதிகளில் உள்ள கிணறு மற்றும் நீர் நிலைகளில் இருந்தே ஆலயங்களுக்கு தண்ணீர் எடுத்துவரும் நிலை இருப்பதால் கோயிலின் புனித தன்மை கெடும் நிலை உள்ளது. எனவே இங்கு அமையவுள்ள மலககசடு மேலாண்மை சுத்திகரிப்பு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.