காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரை இழிவுபடுத்திப் பேசியதை கண்டித்தும், பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கக் கோரியும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரியும் நாடு தழுவிய அளவில் மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து இந்திய குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியது.
அதன் பேரில், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ரயில்வே சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் வளாக நுழைவாயில் அம்பேத்கர் திரு உருவப் படத்தினை கையில் ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது .
மாவட்ட பொறுப்பாளர் சீனிவாச ராகவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவரும் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளருமான வழக்கறிஞர் மதியழகன் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்யாவிடம் மனு அளித்தனர்.
இதில் மாநகரத் தலைவர் நாதன் முன்னிலை வைகித்தார் .மாநில நிர்வாகிகள் அரங்கநாதன் நகர் . அன்பு. சாதிக் பாஷா. முன்னாள் திரைப்படத் தணிக்க குழு உறுப்பினர் வஜ்ரவேல். லயன் குப்புசாமி. நூல் கடை ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகிகள் லோகநாதன் .பிரபு. அனீஸ். கௌதம். முருகன். மாநகர பகுதி தலைவர்கள் காஞ்சி காமராஜ். சப்தகிரி. பட்டு காமராஜ் பார்த்தசாரதி. தென்னேரி சுகுமார். வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கதிரவன் உஷா. மணிகண்டன் குருராஜ். உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.