Close
டிசம்பர் 25, 2024 11:22 மணி

முன்னாள் பிரதமர் வாஜபாய் பிறந்த நாள் அனுசரிப்பு..!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளில் அவரது படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது.

உசிலம்பட்டி :

உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் நாட்டாமை குடும்பம் சார்பில், வாஜ்பாய்
பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர்சிலை முன்பாக மதுரை மேற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி நாட்டாமை குடும்பத்தின் சார்பாக முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள் விழாவை நல்லாட்சி தினமாக இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

முன்னதாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் திருவுருவ பத்திற்கு சிவமுருகன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

இதில், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பிரசாத்கண்ணன், பாண்டியராஜன், மனோ கணேசன், தீபன் முத்தையா, சவுந்திரபாண்டி, இந்திரா, பிரகாஷ், மூத்த நிர்வாகிகள் வனராஜ், போஸ், ஜெயவீரணன், பாபுராஜா, வட்சுமணராஜா, கலைச்செல்வன், நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top