மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றிய தேமுதிக அலுவலகத்தில் தேமுதிகவினர் கேப்டன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி சென்னையில் கேப்டன் ஆலய குருபூஜை விழாவில் பங்கேற்க 100க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சென்றனர்.
மறைந்த தேமுதிக தலைவரும், தமிழக முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜை விழா தேமுதிக தலைமை கழகத்தில் இன்று காலை முதல் அனுசரிக்கப்படுகிறது.
அதனையொட்டி, தமிழக முழுவதும் உள்ள தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் ஆலய குருபூஜை விழா மற்றும் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய தேமுதிக சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எம் ராஜேந்திரன் வழிகாட்டுதல்படி, ஒன்றிய செயலாளர் அழிசூர் வி கன்னியப்பன் தலைமையில், மகளிர் அணி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தேமுதிகவினர், ஒன்றிய அலுவலகத்தில் கேப்டன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்களில் ஏறி தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெறும் கேப்டன் ஆலய அமைதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள சென்றனர்.