Close
ஜனவரி 9, 2025 4:24 மணி

தென்காசியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்..!

கடையத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சி நாதன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் கடையம் யூத் பெடரேசன் நடத்தும் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சி நாதன் துவக்கி வைத்தார்

அன்றாட வாழ்வில் தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் நலத்தை பேண முடியும் என்பதை வலியுறுத்தியும், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் தென்காசி மாவட்டம் கடையம் யூத் பெடரேசன் அமைப்பு சார்ல் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த மாரத்தான் போட்டியை ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொ) மீனாட்சிநாதன்,திருநெல்வேலி ஒருங்கிணைந்த முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சேமச்செல்வன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பேரணி கடையம் இமானுவேல் தேவாலயத்தில் தொடங்கி அங்கப்புரம், நரையப்பபுரம், கட்டேறிப்பட்டி வழியாக மீண்டும் போட்டி தொடங்கிய இடத்தில் நிறைவடைந்தது. 5 கி.மீ தூரத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் நூற்றுக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டி மூலம் உடல் நலத்தை பேணுவதின் அவசியம் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும் பொது மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top