அலங்காநல்லூரில் பொருளாதார மேதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்தனர்.
அலங்காநல்லூர் :
உலகப் பொருளாதார மேதை முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்ததையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பஸ் நிலையம் முன்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக வட்டாரத் தலைவர் சுப்பாராயல், தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி, நகரத் தலைவர் சசிகுமார், முன்னாள் வட்டாரத் தலைவர் மலைக்கணி, மாவட்ட பொது செயலாளர் ராமமூர்த்தி, வட்டாரத் துணைத் தலைவர் திரவியம், வட்டாரச் செயலாளர் செல்லத்துரை, சிறுபான்மை அணி கண்ணன், மற்றும் நிர்வாகி பெருமாள், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் அலெக்ஸ், மற்றும் சொக்கர், நாராயணன், முருகன், ஸ்டீபன், பாஸ்கர், ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.