சோழவந்தான் :
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது ஜி கே குரூப் சார்பில் விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் விஜயகாந்த் ரசிகர்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கருப்பட்டி நிர்வாகிகள் கிளைச் செயலாளர் பாண்டி ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராமு, கருப்பட்டி ஊராட்சி செயலாளர் பிரகாஷ் மற்றும் சபிக், கார்த்தி, சுரேஷ், பாலா, முத்தையா, குமார், பாக்யராஜ்,விஜி, ராஜபாண்டி, பாலா, பிச்சைமணி, முனியாண்டி, திவான், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்