Close
டிசம்பர் 28, 2024 9:20 மணி

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் திருவெம்பாவை – திருப்பாவை சொற்பொழிவு..!

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் திருவெம்பாவை -  திருப்பாவை சொற்பொழிவு நடந்தது.

மதுரை :

மதுரை அருகே,திருவேடகம், விவேகானந்த கல்லூரி, தமிழ்த்துறை மற்றும் பாவை அரங்கம் சார்பாக திருவெம்பாவை –  திருப்பாவை சொற்பொழிவு நடைபெற்றது.

தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. தமிழ் துறை பொறுப்பு தலைவர் முனைவர் இராமர் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இச்சிறப்புச் சொற்பொழிவில், மதுரைக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கண்ணன் ‘பாசம் பரஞ்சோதிக்கு’என்னும் பொருண்மையிலும், மதுரை, கவிஞர் செல்லா ‘ஆண்டாள் தமிழும் வழிபாட்டு மரபும்’ என்னும் பொருண்மையிலும் சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியை, உதவிப்பேராசிரியர் முனைவர் முத்தையா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அலுவல் நிலைப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் சுதாகர் வடிவேலு, பிரபாகரன் இந்நிகழ்வை ஒருங்கிணைப்புச் செய்தனர். உதவிப்பேராசிரியர் முனைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top