சோழவந்தான் :
சோழவந்தான் ஸ்ரீசபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் நலச்சங்கம்சார்பில் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயிலில் புதிய நிர்வாகிகள் தேர்வு டிசம்பர் நேற்று (27ம் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 200 பேர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இந்த அமைப்பின் தலைவராக சுரேஷ் உகந்தாட்சி, துணைத் தலைவராக காளீஸ்வரன், செயலாளராக ராமன்,துணைச் செயலாளராக ஜெயக்குமார், பொருளாளராக தாமோதரன், துணை பொருளாளராக சுரேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொதுக்குழு ஒப்புதல் பெறப்பட்டது.
கோயில் சட்ட ஆலோசகராக கார்த்தி ராஜா பொறுப்பேற்றார். புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் அனைவரும் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்பாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.