சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஆகும்.
இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34.92 அடி உயரம் உள்ளது.அதன் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 3121 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது . இந்த ஏரிக்கு நேற்று 1090 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 1290 கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது
இந்த ஏரியிலிருந்து புழல் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளுக்கு 800 கன அடி நீம் திறக்கப்பட்டு வந்த நிலையில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியிலிருந்து மீண்டும் வினாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு ஆட்சியர் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.