உசிலம்பட்டி :
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்கக் கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டு நூதன போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி, பெட்ரோல், டீசல், கேஸ் மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எப்போது சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறார் என்று அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்ட படத்துடன் கேள்வி எழுப்பி போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.
உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான மதுரை ரோடு, தேனி ரோடு, பேருந்து நிலையம், வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு என பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டி அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளது. உசிலம்பட்டி பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.