Close
ஜனவரி 1, 2025 4:53 காலை

அலங்காநல்லூர் ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்..! முன்னாள் பிரதமருக்கு மௌன அஞ்சலி..!

கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள்.

அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை மற்றும் தனிச்சியம் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

சோழவந்தான் :

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை மற்றும் தனிச்சியம் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் 2023 .24 மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஊரகம் இவைகளுக்கான சமூக தணிக்கையின் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

அய்யங்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி ஊராட்சி செயலர் ராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான தலைவர் சுதா, எழுத்தர் போதுமணி ஆகியோர் நடத்தினார்கள்.

தனிச்சியம் ஊராட்சியில் கூட்டத்திற்கான தலைவர் இருளாண்டி,எழுத்தர் ராதிகா ஆகியோர் நடத்தினார்கள். கூட்டத்தில் தலைவர் பொன்னழகு செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். கிராம சபை அறிக்கைகளை தமிழ்நாடு சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் சாரா மற்றும் கிராம அலுவலர்கள் அறிக்கைகளை வாசித்தார்கள்.

தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தின் முடிவில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top