Close
ஜனவரி 1, 2025 5:57 காலை

சுற்றுலா தலமான தாமல் ஏரி..! எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு..!

தாமல் ஏரியில் குளிக்கும் பொதுமக்கள்

மூன்று பேர் நேற்று உயிரிழந்தனர். எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை எழுந்த நிலையில் இன்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுளளது.

காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரியில் உபரி நீர் வெளியேறி வரும் நிலையில் பொதுமக்கள் அதிகம் குவிந்து ஆபத்தான நிலையில் குழந்தைகளுடன் குளித்து வரும் நிலையில் எந்தவித எச்சரிக்கை பலகையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் நீர் ஆதாரத்துறையின் எடுக்காத செயல் அதிர்ச்சி அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதங்களில் பெய்த பருவ மழை மற்றும் புயல் காரணமாக மாவட்டத்தில் 75 சதவீத ஏரிகள் முழுமையாக நிரம்பியது.

குறிப்பாக மாவட்டத்தின் முக்கிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி மிக அதிக கொள்ளளவு கொண்ட நீர் சேமிப்பு ஏரியாகும்.

இந்தப் பருவமழைக்கு காலங்களில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக நிரம்பி வழிந்து உபரிநீர் கடந்த 15 தினங்களாக வெளியேறி வருகிறது.

இந்த நிலையில் இப்போது சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் விடுமுறை நாட்களில் இந்த ஏரிக்கு வந்து உபரி நீர் கலங்கள் வழியாக செல்லும் பகுதியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

500க்கும் மேற்பட்ட மக்கள் குளித்து வரும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிக அளவில் பொதுமக்கள் கூடினர். அப்பகுதிக்கு இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகை புரிந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் நீர்நிலைகளில் குளிப்பதோ செல்பி போன்ற புகைப்படங்கள் எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் , இதுகுறித்து துறை அலுவலர்கள் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும் என கூறியிருந்த நிலையில் , நீர்வள துறையோ ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என எந்தவித எச்சரிக்கப் பலகையும் அப்பகுதியில் வைக்கப்படவில்லை.

நேற்று கூட காஞ்சிபுரம் அருகே செய்யாற்றில் குளிக்கச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் இன்னும் மறையாத நிலையில் எச்சரிக்கை பலகை வைப்பதை அலட்சியப்படுத்துகிறது.

பொதுமக்கள் அதிகம் வருவதை அறிந்த பாலு செட்டி சத்திர காவல்துறையினர் இது குறித்து எச்சரிக்கை பலகையை அப்பகுதியில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top