Close
ஜனவரி 1, 2025 5:42 காலை

‘தூய்மை பணியாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவேண்டும்’ தவெக மாவட்ட தலைவர் கோரிக்கை..!

தமிழக வெற்றிக்கழக மாவட்ட தலைவர் கூட்டத்தில் பேசிய போது எடுத்த படம்.

குற்றாலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்க மாநாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகளுக்கு இலவச மின்சாரமும் வழங்க வேண்டும் என தமிழக வெற்றி கழக மாவட்ட தலைவர் நியாஸ் பேசினார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்க மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாநில தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

மாநில துணைத் தலைவர் மாரிமுத்து வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் குருவம்மாள், தென்காசி மாவட்ட சுகாதார ஊக்குனர் ராஜேஸ்வரி, மாநிலத் துணைப் பொருளாளர் கனகலட்சுமி, தென்காசி மாவட்ட தலைவர் புதியவன், மாவட்ட செயலாளர் பெருமாள் சாமி, பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வெற்றி கழக மாவட்ட தலைவர் நியாஸ் , மாநில செயற்குழு உறுப்பினர் லியாகத் அலி, இந்தி புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் செல்லச்சாமி, அருந்ததியர் மனித வள கூட்டமைப்பு தேனி முருகேசன், மனிதவள மேம்பாட்டு நிறுவன தலைவர் விஜயகுமார், திரைப்பட இயக்குனர் ஜிப்சி ராஜ்குமார், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வருடாந்திர தமிழக பட்ஜெட்டில் தூய்மை பணியாளர்களுக்கென்று தனி நிதிநிலை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை ரூபாய் 15 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் முன்னேற்றம் அடைந்திட கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அரசின் இலவச திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் விழாக்கால சலுகையான பொங்கல் ஊக்கத்தொகை தூய்மை காவலர்களுக்கும் வழங்க வேண்டும்.

தூய்மை பணியாளர் நல வாரியம் மூலமாக வீடற்ற நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் வாயிலாக வழங்கப்பட்டு வரும் இலவச வீட்டை ஊராட்சிகளிலும், மாவட்ட தாட்கோ மூலமாக அவரவர் சொந்த இடத்தில் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top