Close
ஜனவரி 9, 2025 8:17 காலை

புத்தாண்டு வரை தமிழ்நாட்டில் மழை..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

மழை -கோப்பு படம்

தமிழ்நாட்டில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (30ம் தேதி) லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை (31ம் தேதி ) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை

அதேபோல், தமிழ்நய்யில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அதாவது புத்தாண்டு பிறப்பன்று முதல் 4ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சென்னையைப்பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகாலை வேளைகளில் அங்கங்கு லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top