பொன்னேரி
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டினை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்த நபரின் பாலியல் வன்முறை குறித்து மாணவி புகார் அளித்ததின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த இந்த சம்பவத்தைக் கண்டித்தும் , உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசின் செயல் அற்ற தன்மையை கண்டித்தும் தமிழக முழுவதும் இன்று கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவித்திருந்தார்.
அவ்வையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் இன்று பொன்னேரி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற போது காவல்துறைக்கும் அதிமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் கூடுதல் காவல் பணிக்கு இருந்த காவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறை தங்க வைத்துள்ளது.
இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது. அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன் ராஜா கே எஸ் விஜயகுமார் ராகேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.